- நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் பங்கேற்ற கண்டுணர்வு கண்காட்சி சுற்றுலா.
- வேளாண் உதவி இயக்குனர் கற்பக ராஜ்குமார் வழிகாட்டுதலின்படி இந்த சுற்றுலா நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவியில் வட்டார விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், கண்டுணர்வு கண்காட்சி சுற்றுலாவிற்கு சென்று பார்வையிடுவதற்கு வேளாண்மை உழவர் நலத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
வேளாண்மை உழவர் நலத்துறை, சேரன்மகாதேவி வட்டார மேலாண்மை தொழில்நுட்ப முகமையின் மாநில விரிவாக்க திட்டத்தின் கீழ் , வட்டார வேளாண் உதவி இயக்குனர் கற்பக ராஜ்குமார் வழிகாட்டுதலின்படி இந்த சுற்றுலா நடைபெற்றது.
கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் கொடிசியா நடத்திய வேளாண் கண்காட்சிக்கு சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர் .அங்கே பண்ணை இயந்திரம் மயமாக்கல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார், வட்டார வேளாண் உதவி பொறியாளர் சண்முகசுந்தரம், உதவி மேலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் இந்த கண்காட்சி சுற்றுலா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
Image source: dinakaran.com