செய்திக்குறிப்புகள்:
- விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது.
- நெல்லை மாவட்டத்தில் 350 இடங்களில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நெல்லை மாவட்டத்தில் 350 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு வருடமும் விநாயக பெருமானின் பிறந்தநாள் விழாவான விநாயகர் சதுர்த்தி நாடெங்கும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த வருடம் நெல்லை மாவட்டத்தில் போன வருடம் விநாயகர் சிலைகள் வைத்த அதே இடங்களில் வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். கருப்பந்துறை ,பேட்டை, கருங்குளம் டவுன் விலாசம் உள்ளிட்ட பல இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
சிலைகள் வைக்கும் போது அதற்கான வரைமுறைகள் என்ன என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளதாவது ;
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகள் மட்டுமே அனுமதி உண்டு . சிலைகள் வைக்கும் இடத்தில் தன்னார்வலர்கள் நிச்சயம் இருக்க வேண்டும் . மின்விளக்கு வெளிச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு பணி தீவிரபடுத்தப்பட்டு போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் சுமார் ஆயிரம் போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.
கமிஷனர் அவிநாஷ்குமார் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர பகுதியில் துணை கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா, சீனிவாசன் ஆகியோரின் தலைமையில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
சில இடங்களில் வியாழக்கிழமையும், பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமையும் விநாயகர் சிலைகள் கடலில் சென்று கரைக்கப்பட உள்ளன. விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு சதுர்த்தி விழாவை சிறப்பித்தனர். சிறப்பு பூஜைகள் அன்னதானம் அனைத்தும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
Image source: dailydhanthi.com