- பாளையங்கோட்டை ராமசாமி கோவில் மாசி திருவிழா.
- நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை நகரில் அமையப்பெற்றுள்ள ராமசுவாமி திருக்கோவிலின் மாசி திருவிழா கடந்த 13/03/2022 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்த விழாவில் தினமும் ராமசுவாமி தோளுக்கினியான், பல்லக்கு, புன்னகை மர வாகனம், அனுமந்த வாகனம், சிம்ம வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம், சந்திர பிரபை வாகனம் போன்றவற்றில் தினமும் எழுந்தருளி வீதிகளில் உலா வந்தார்.
இந்நிலையில் மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று (22/03/2022) காலை நடைபெற்றது. அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகள் மற்றும் பெருமாள் ரத வீதிகளில் உலா வந்த சீதா தேவி, லட்சுமணன், ராமசுவாமி ஆகியோரை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
Image source: dailythanthi.com