திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்ததன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம், வடக்கு கழுவூர், நெல்லை நயினார்குளம், பாளையங்கோட்டை வேய்ந்தான்குளம், ஆகிய குளங்களில் தற்போது உள்நாட்டு பறவைகளும், வெளிநாட்டு பறவைகளும் ஆயிரக்கணக்கில் கூடுகட்டி இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து தற்போது பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட வன அலுவலர் முருகன் தொடங்கி வைத்தார். இதில் பறவைகள் எத்தனை உள்ளன? என்ன வகையான இனங்கள் உள்ளன? இதன் இனப்பெருக்க காலம் எவ்வளவு? என்பன உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளத்தில் நடைபெற உள்ள பறவைகள் கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.