கடையம் அருகே உள்ள வெய்க்காலிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலர் தங்கள் தோட்டங்களில் தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள தோட்டங்களில் உள்ள பல தேன்கூடுகைள கரடி புகுந்து சேதப்படுத்தி வருவதால் இப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, தங்கள் தோட்டங்களில் கரடி புகுந்து தேன்கூடுகளை சேதப்படுத்துவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை செய்து உள்ளனர். இதனை அடுத்து வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.