நெல்லை மாவட்டம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் செல்லலாம் என்ற அனுமதிக்கப்பட்ட இந்த நிலையில் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை தீவிரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 28ஆம் தேதி ஆடி அமாவாசை திருவிழா சொரிமுத்து அய்யனார் கோவிலில் விமர்சையாக கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் செல்வதற்கான பேருந்து வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது கூறியதாவது;
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும் . அதற்காக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
திருநெல்வேலி மாவட்டத்தில் 'தூய பொருனை நெல்லைக்கு பெருமை என்ற தலைப்பில் நெல்லை நீர் வளம் சார்பில் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் 1200 நீர் நிலைகள் கண்காணிப்பில் இருந்து வருகின்றன. தாமிரபரணி ஆற்றின் ஓரம் முக்கியமாக ஆடி அமாவாசை நிகழ்வில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது
அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவில் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்துவதை தடுப்பதற்கு மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சார் ஆட்சியர், காவல்துறையினர், களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகம், துணை இயக்குனர் ஆகியோர் தலைமை ஏற்று வருவாய்த்துறை வனத்துறை, உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள். சோதனை சாவடிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்து துணிப்பை உபயோகித்து பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பேசினார்.
Image source: dailythanthi.com