ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் / நம்மாழ்வார் திருக்கோவிலில் மாசி திருவிழா கடந்த 12/02/2022 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை அடுத்து திருவிழாவின் முதல் எட்டு நாட்களும் காலையும், மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தார். ஒன்பதாம் திருநாளான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர், காலை 6.30 மணியளவில் நம்மாழ்வாா் கேடயத்தில் புறப்பட்டு தேரில் எழுந்தருளினாா். அதனை தொடா்ந்து ஜீயா் சுவாமிகள் முன்னிலையில், காலை 8.30 மணியளவில் திரளான பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுக்க தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து பத்தாம் திருநாளான இன்று இரவு நம்மாழ்வார் தெப்பத்திருவிழாவும், பதினோராம் திருநாளான நாளை இரவு ஆதிநாதர் பெருமாள் தெப்பத்திருவிழாவும், பன்னிரெண்டாம் திருநாளான நாளை மறுநாள் மாசி விசாக தீர்த்தவரியும் விமரிசையாக நடைபெற உள்ளது.
Image source: dailythanthi.com