செய்து குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மாஞ்சோலையில் பயங்கர சூறைக்காற்று மின்கம்பங்கள் சேதம்.
- உடனடியாக சரி செய்யப்பட்டு மின் கம்பங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
ஜில்லென்று காற்று வீசும் ஆனந்தத்தை அனுபவிக்கும் மக்கள் அதே காற்று சூறைக்காற்றாய் வீசினால் அதை தாங்காது அவதிப்படத்தான் செய்கின்றனர்.
அப்படித்தான் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மாஞ்சோலை பகுதியில் பலமாக நேற்று முன்தினம் சூறைக்காற்று வீசியது. சூறைக்காற்று வீசியதில் மரங்கள் சாய்ந்து வேகம் தாங்காது பத்து மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. ஆதலால் மாஞ்சோலை பகுதி மக்களுக்கு மாற்றுப் பகுதி மின் இணைப்பு உடனே வழங்கப்பட்டது.
போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு சாய்ந்து விழுந்த மரங்களும் மின் கம்பங்களும் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய மின்கம்பங்களை நடும் பணி நடந்தது.
கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலை எடும் பெருமாள் தலைமையில் தலைமையில் கல்லிடைக்குறிச்சி உதவி செயற்பொறியாளர் திரு சங்கர் கல்லிடைக்குறிச்சி இளநிலை பொறியாளர் முன்னிலையில் கல்லிடைக்குறிச்சி உபகோட்ட மின் பணியாளர்கள் விரைவாக பணியில் ஈடுபட்டனர் .
விரைவில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து நேற்று மீண்டும் மணிமுத்தாறு மாஞ்சோலை மக்களுக்கு புதிதாக மின்சாரம் பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மின்சாரம் என்னவென்றே தெரியாது மக்கள் வாழ்ந்தனர் அன்று. ஆனால் இன்றோ! ஒரு நிமிடம் கூட மின்சாரம் இன்றி வாழ முடியாது எனும் அவசியத்தை புரிந்து கொண்ட அரசு துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு மின்சாரம் சீரமைத்து தன் பணியை செவ்வனே செய்ததற்கு திருநெல்வேலி டுடே நன்றி தெரிவிக்கின்றது