செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
- நிகழ்ச்சிக்கு வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் வசந்த சந்திரா தலைமை தாங்கினார்.
நெல்லை மாவட்டத்தில் வீரவநல்லூர் பேரூராட்சி தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் வசந்த சந்திரா ஆகியோர் தலைமை தாங்கினார்.
வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு பற்றி அறிவுறுத்தப்பட்டது.
17 வது வார்டு பொது மக்களுக்கு கோல போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஓவியம் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பூங்காவின் பராமரிப்பு விஷயங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதனை எப்படி தரம் பிரித்து எடுக்கின்றோம் என்ற செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது அதைப்போலவே உரப் பூங்கா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதனை எப்படி தரம் பிரித்து எடுக்கின்றோம் என்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
அதைதொடர்ந்து வீரவநல்லூர் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாலையில் நடைபெற்றது.
சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பான முறையில் செய்திருந்தார்
வளரும் சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அடிக்கடி ஊட்டுவதன் மூலம் நிச்சயம் ஒரு நல்ல முன்னேற்றம் காணும் என்பதை வலியுறுத்தி அரசு நடத்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பாராட்டுக்குரியது.
Image source: dailythanthi.com