"மனிதராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது *"என்பது அந்தக் காலமுங்க..
பிடித்து இழுத்து செய்த தவறை திருத்தி சிந்திக்கத் தூண்டி , வழி காட்டும் கலிகாலம் இந்த காலமுங்க.
பெற்றவர்கள் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி அன்பு கொடுத்து, சோறூட்டி பள்ளிக்கு அனுப்பினால் மட்டும் போதுமா ! நிச்சயம் போதாது சுத்தத்தையும் சுகாதாரத்தையும் சேர்த்து கற்பித்தல் அவசியம்.. என்கிறது பள்ளி நிர்வாகம்
சொன்னால் மட்டும் போதுமா! செயலிலும் காட்டுவோம் என்கின்றது
கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல் நிலை பள்ளி.
*புதுச்சேரியில்* இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள ....
*விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல் நிலை பள்ளி* வாசலில் பெரிய கத்தரிக்கோல், தேங்காய் எண்ணெயுடன் தலைமை ஆசிரியர் நின்று கொண்டிருக்கின்றார்.
பள்ளி மாணவ-மாணவியர் மிகுந்த உற்சாகத்தோடு பள்ளிக்குள் செல்கை யில், தலை கலைந்து இருக்கும் மாணவ மாணவியரை மட்டும் தனியே அழைத்து தன்னுடைய கையில் இருக்கும் கத்திரிக்கோலால் முன்பகுதியில் வளர்ந்திருக்கும் முடிகளை கட் செய்து, தன் கையில் வைத்திருந்த தேங்காயெண்ணை பாட்டிலில் உள்ள தேங்காய் எண்ணெய் மாணவரின் கையில் ஊற்றி தலையில் தேய்க்கச்சொல்லி தன் கையாலேயே சீப்பால் தலையை வாரி விட்டு அனுப்புகின்ற இந்த நற்செயல் நமக்கும் நிச்சயம் பிரம்மிப்பூட்டும் விதத்தில் அமைகின்றது.
பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் அறிவுரை சொல்லியும், கேட்காததால் இந்த புதிய முயற்சியை கையாண்டு இருக்கும் இந்த ஆசிரியரின் முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியதே.
அன்பு* பண்பு *மாண்பு* எனும் வரம்பு மீறா பயிற்சிதனை பிள்ளைகளுக்கு நாம் அளிக்க .. சிந்தித்து செயல்பட்டு கரும்பு* இனிப்பு* பூரிப்பு* நிறைந்த வாழ்வுதனை அவர்கள் பெற்றுவிட்டால் இனிது இனிது வாழ்க்கை என்றும் இனிதன்றோ!