- நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் தன்னார்வலர்களுக்கு 16-8-2022 ஆம் தேதி முதல் பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
- ஆப்தமித்ரா பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தொடங்கி வைத்து உரையாற்றினார்.
திருநெல்வேலி மாவட்டம் அரசு பொறியியல் கல்லூரியில் தன்னார்வலர்களுக்கு 16-8-2022 ஆம் தேதி முதல் பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
ஆப்தமித்ரா எனும் பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பை ஆட்சியர் விஷ்ணு அவர்கள் தொடங்கி வைத்தார்.
அப்பொழுது மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்ததாவது;
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டம் சேர்த்து 16 மாவட்டங்களில் ஆப்தமித்ரா எனும் திட்டத்தின்கீழ் தொடர்ந்து12 நாட்கள் பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனமும் , மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனமும் இணைந்து இந்த பயிற்சியை நடத்துகின்றன. முதல் கட்டமாக இப்பொழுது 150 தன்னார்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. இந்த பயிற்சி வகுப்பில் உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றுவது குறித்தும் வகுப்புகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் வழங்கப்படும்.
இந்த பயிற்சியில் சேர்ந்து சிறப்பாக பயிற்சி பெற்று, நம்முடைய மாவட்டத்தில் பேரிடர்கள் ஏற்பட்டால் அதில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கான வழிமுறைகளை கையாள்வோம் என உறுதி ஏற்போம் என்று மாவட்ட ஆட்சியர் கூ
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( பொது) கணேஷ்குமார், அரசியல் மாவட்ட கல்லூரி முதல்வர் கே மனோன்மணி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Image source: dailythanthi.com