- தமிழக அரசின் பசுமை விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
- விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15/03/2022.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் 100 நபர்களுக்கு பசுமை சாம்பியன் விருதும், தலா ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ட ஆட்சியர் திரு. விஷ்ணு அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள் மற்றும் பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு
உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை ஆகிய தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சிறப்பாக தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளது எனவும் விருது பெற தகுதி வாய்ந்தவர்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய www.tnpcb.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து வரும் 15/03/2022 க்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image source: tirunelveli.nic.in