தூத்துக்குடி மாவட்டத்தில் 2022 - 23 ஆம் கல்வியாண்டில் புதிதாக தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செந்திலராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் கல்வியாண்டில் புதிதாக தொழிற்பள்ளிகள் தொடங்க விரும்புபவர்கள், தொழிற் பள்ளிக்கான தொடர் அங்கீகாரம் பெற விரும்புபவர்கள், தொழிற்பள்ளியில் புதிய தொழிற் பிரிவுகளை தொடங்க விரும்புபவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற முகவரி மூலமாக இணையதளத்தில் வரும் 30.4.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்குரிய விண்ணப்பகட்டணம் மற்றும் ஆய்வு கட்டணத்தை தொழிற்பள்ளியின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.