செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் விழிப்புணர்வு பேரணி புறக்காவல் நிலையம் அருகில் தொடங்கியது.
- போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையில் சிறப்பாய் நடைபெற்றது.
போதை எனும் பொருள் சமுதாயத்தை சீரழிக்க கூடியதாய் இருப்பதால் ,அதை அறவே நீக்கும் விதமாக பல்வேறு முயற்சிகளை தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசும் செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் மிக பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி புறக்காவல் நிலையம் அருகில் தொடங்கியது .
முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையில் இந்த பேரணி தொடங்கப்பட்டது. கோபாலசமுத்திரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தரராஜ் முன்னிலை வகிக்க , கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஸ்வரி தனி அலுவலர் மீனாட்சி பகுதி பொறுப்பாளர்கள் மரியமிக்கேல் ஜீவா , ஜெபமணி செந்தில்குமார் அருள்முருகன், கோபால் ஆகியோர் கருத்துரை ஆற்றினர் . கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார்.
திருநெல்வேலி கோபாலசமுத்திரம் பேரூராட்சி, சேரன்மாதேவி முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையம், மற்றும் கோபால சமுத்திரம் கிராம உதயம் இணைந்து200 குடிசைகள் வழங்குதல், 300 மரக்கன்றுகள் வழங்குதல் நடுதல் மற்றும் பராமரித்தல், பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு , துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முதலியவற்றை நடத்தியது .
கிராம உதயம் தன்னார்வத் தொண்டர் உச்சி மகாலி நன்றி கூறினார் . மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் துணிப்பை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.
Image source: dailythanthi.com