செய்திக்குறிப்புகள்:
- நெல்லை டி .டி .என் கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- கல்லூரி முதல்வர் சுரேஸ் தங்கராஜ் தாம்சன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி விழாவை நடத்தி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சமூகரெங்கபுறத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வள்ளியூர் டி.டி. என் கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுரேஸ் தங்கராஜ் தாம்சன் தலைமை தாங்கினார்.
வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் பிரகாசி என்ற தலைப்பில் உரையாற்றினார். வள்ளியூர் ரோட்டரி கிளப் ஆப் சென்ட்ரல் சங்கத்தின் முன்னாள் தலைவர் செல்லப்பா சிறப்புரையாற்றினார் .
14 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தொடர்ந்து சதுரங்கம், பேச்சுப் போட்டிகள் அனைத்தும் பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்றது. ஆறு பிரிவுகள் கொண்ட சதுரங்கப் போட்டியாக நடைபெற்றது. சீலாத்திக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் இந்த சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றனர்.
'ஏ' பிரிவு போட்டியில் திசையன்விளை ஸ்டெல்லா மேரி மேல்நிலைப் பள்ளியும், 'பி' பிரிவு போட்டியில் விஜய அச்சம்பாடு செந்தில் ஆண்டவர் மேல்நிலைப் பள்ளியும் , 'சி' பிரிவு போட்டியில் ராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
நேரு நர்சிங் கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். கணிப்பொறியியல் துறை விரிவுரையாளர் உமா பரமானந்தம் வரவேற்புரை நிகழ்த்தினார். சிவில் துறை விரிவுரையாளர் பவித்ரா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
Image source: dailydhanthi.com