Logo of Tirunelveli Today

நெல்லையப்பர் கோவிலில் இனிதே நடைபெற்றது ஆனி திருவிழா

July 4, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் மிகவும் விமர்சையாக ஆனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருத்தலம் என்று பெயர் பெற்றது நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில். இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பலவிதமான திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது.

அது போலவே ஒவ்வொரு வருடமும் நெல்லையப்பர் கோவிலில் ஆனி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் சிறப்பாக கோவில் நிர்வாகம் ஏற்பாடு நடத்தும்.அதுபோலவே இந்த வருடமும் ஆனி பெருந்துறை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதிகாலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் 7. 40 மணிக்கு பூங்கோவில் சப்பரத்தில் முழு வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. காலை 8 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு , தொடர்ந்து கொடி மரத்திற்கு தீவாரதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன .

திரளான பக்தர்கள் நிகழ்வில் இந் நிகழ்வில் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். நேற்று இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் நான்கு ரத வீதிகளிலும் உலா வர… கோவில் கலையரங்கில் மங்கல இசை , பக்தி சொற்பொழிவு, வாசகி மனோகரின் பக்தி அரங்கம், பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 8 மணிக்கு வெள்ளி சக்கரத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருச்சக வாகனத்திலும் அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் வீதி உலா வரும் கண்களுக்கு இனிய நிகழ்வு நடைபெறுகின்றது . மாலையில் கலையரங்கில் பல்வேறு பக்தி சொற்பொழிவு பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது.

வருகிற 11-ஆம் தேதி திங்கட்கிழமை 9 ஆம் திருநாள் சிகர நிகழ்ச்சி . தேரோட்டம் நடக்கிறது அன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி அம்பாள் தேரில் எழுந்தருள காலை 9 மணிக்கு சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது .மறுநாள் 12ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது..

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2026 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify