நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் பக்தி பிரவாகத்தோடு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்தோடு வடம் பிடித்து இழுத்தனர் .
தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருத்தலமும் ஒன்று. வருடம் முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் ஐதீக முறைப்படி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இதில் முதன்மையானதாக ஆனி பெரும் திருவிழா திகழும் .ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாய் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆனி பெரும் திருவிழா தேரோட்டம் நடைபெறாது இருந்து வந்தது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கோவில் மீண்டும் திறக்கப்பட்டு விழாக்கள் மீண்டும் நடைபெறுகிறது.
இதன்படி கடந்த மூன்றாம் தேதி நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி அம்பாளுக்கு பல்வேறு வகையான மங்கல அபிஷேகம், அலங்கார தீபா ராதனைகள், தெய்வீக வீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் இசை நிகழ்ச்சிகளோடு நடத்தப்பட்டு வந்தன.
காலை 9 .26 மணிக்கு விழாவின் சிகரநிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சுவாமி தேர் வடம் பிடித்து பக்தர்கள் கரகோஷம் எழுப்ப இழுக்கப்பட்டது. தமிழக சபாநாயகர் அப்பாவு , கலெக்டர் விஷ்ணு, நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் கலாம் , மாநகராட்சி மேயர் பி எம் சரவணன், துணை மேயர் கே.ஆர் ராஜு , மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி. எஸ். ஆர் ஜெகதீஷ், திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அவருடைய திமுக கழக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், நாகேந்திரன் , எம்எல்ஏ மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்திஉள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தமிழகத்திலேயே மிகவும் புகழ்பெற்ற மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமைக்குரியது சுவாமி நெல்லையப்பர் தேர். தேர் அழகாக அசைந்த ஆடிவரும் காட்சி பக்தர்களின் மனதை கொள்ளை கொண்டு தன்னிலை மறந்து விடுவர். அவ்வளவு அற்புதமாக நெல்லையப்பர் திருத்தேர் அமைந்திருப்பது இந்த திருத்தலத்தின் சிறப்பு.
முழுக்க முழுக்க பக்தர்களின் கைகளால் இழுக்கப்பட்ட தேரானது கீழரத வீதி வாகையடி மூக்கு , தெற்கு ரத வீதி, சந்திப் பிள்ளையார் கோவில் முக்கு மேல ரத வீதி ,லாலா சத்திரம், விநாயகர் கோவில் முக்கு என ரத வீதிகளில் வலம் வந்து கீழ ரத வீதியில் , சுவாமி சன்னதிக்கும் அம்பாள் சந்ததிக்கும் நடுவே உள்ள நிலையை வந்தடைய ஏராளமான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே அம்பாள் தேரும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். . மாலையில் சுவாமி தேரோடு தொடர்ந்து அம்பாள் தேரும் நிலையை வந்ததடைய ஆனி தேரோட்ட விழா நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.
Image source: dailythanthi.com