செய்திக் குறிப்புகள் :
- அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் நெல்லை மாவட்டத்தில் தொடரும் வெயிலின் தாக்கம்
- வியர்வை பயணத்தோடு குடை பிடித்து நடக்கும் அவதியில் நெல்லை மக்கள்
தமிழகத்தில் கோடைகாலம் என்றாலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று.
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கிய காலங்களில் லேசாக மழை பெய்து வந்தது. ஆனால் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
காலை நேரத்தில் சூரியன் தாக்கம் அதிகமாகி நேரம் செல்ல செல்ல வெப்பம் அதிகமாகி வியர்வை பயணத்தோடு குடை பிடித்துக்கொண்டு செல்லும் அவதியுறும் நிலை நெல்லை மக்களுக்கு இப்போது நடந்து வருகிறது.
நேற்று நண்பகல் நேரத்தில் சாலையில் செல்வோர் வெயிலின் தாக்கத்தால்
பெரிதும் அவதிப்பட , காற்று புழுதி வாரித் தூற்றுவது போக்குவரத்து இடையூறாகவும் அமைந்தது .
நேற்று வெயில் அளவு 100 டிகிரி ஆக பதிவான இந்த நிலையில் உள்ள தென்மேற்கு பருவக்காற்று பருவ மழை பெய்தால் மட்டுமே வெப்பத்தை தணிக்க முடியும் என்பதால் மழை வருமா! குளிர்ச்சிதருமா! என மக்கள் எதிர்பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
வெயில் காலத்தில் நோய் நொடிகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ள , ராஜகனி என அழைக்கப்படும் எலுமிச்சை பழத்தில் இஞ்சியும், தேனும் சேர்த்து அடிக்கடி பருகி வாருங்கள் என திருநெல்வேலி டுடே பொதுமக்களை அறிவுறுத்துகின்றது.