- அம்பாசமுத்திரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளின் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியீடு.
- 14 வார்டுகளை கைப்பற்றி ஆளும் கட்சி முன்னிலை.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் நகராட்சியின் 21 வார்டுகளுக்கும் கடந்த அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், நேற்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க 14 இடங்களிலும், அ.தி.மு.க 3 இடங்களிலும், காங்கிரஸ், ம.தி.மு.க ஆகியவை தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்:
வார்டு 1 - மாரிமுத்து (அ.தி.மு.க.), வார்டு 2 - செலின்ராணி (தி.மு.க.), வார்டு 3 - சிவசுப்பிரமணியன் (தி.மு.க.), வார்டு 4 - அனுசியா (தி.மு.க.), வார்டு 5 - அழகம்மை (தி.மு.க.), வார்டு 6 - கல்யாணி (தி.மு.க.), வார்டு 7 - ராமசாமி (தி.மு.க.), வார்டு 8 - சித்ராதேவி (சுயே.), வார்டு 9 - காதர்இஸ்மாயில் (தி.மு.க.), வார்டு 10 - தமிழ்செல்வி (சுயே.), வார்டு 11 - பேச்சியம்மாள் (காங்.), வார்டு 12 - கே.கே.சி.பிரபாகரபாண்டியன் (தி.மு.க.), வார்டு 13 - பேச்சிகனியம்மாள் (தி.மு.க.), வார்டு 14 -சவுராபானு (தி.மு.க.), வார்டு 15 - சிவக்குமார் (அ.தி.மு.க.), வார்டு 16 - முத்துலட்சுமி (ம.தி.மு.க.), வார்டு 17 - மாரியம்மாள் (தி.மு.க.), வார்டு 18 - லதா (தி.மு.க.), வார்டு 19 - ஜோதிகலா (தி.மு.க.), வார்டு 20 - வேலுச்சாமி (அ.தி.மு.க.), வார்டு 21 - முத்துகிருஷ்ணன் (தி.மு.க.)
Image source: Facebook.com