தெய்வத்திற்கும் நமக்கும் உள்ள தொடர்பை ஆழமாக உணர செய்வது ஆன்மீகம் . கடவுளை உணர்வதற்கு கடவுளுக்கும் நமக்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்குவது , ஆன்மீக கடலில் மூழ்கி தெய்வீகம் உணர்ந்து பூர்வ ஜென்ம பாவங்கள் மறைந்து புண்ணியங்களை பெற்றுத்தருவது ஆன்மீகச் சுற்றுலா.
ஆன்மீகச் சுற்றுலா பயணிகளுக்கு அமர்நாத் யாத்திரை பயணம் என்பது மிகவும் ஆனந்தம் அளிக்கக்கூடிய பயணமாக அமையும் என்பதை பறைசாற்றும் வகையில்
அமர்நாத் யாத்திரை ஜூன் 30 இல் 2022 அன்று தொடங்கி 11- 8 - 22 அன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் இன் முதன்மை செயலாளர் மனோஜ் சின்ஹா, நிதிஷ்வர் குமார் அமர்நாத் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் யாத்திரைக்கு வரும் யாத்திரிகர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாத விஷயங்கள் என்ன! சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை தெரிவித்துள்ளனர்.
யாத்திரையின் போது அவர்களுடைய உடல் நலத்தைக் கருதி அமர்நாத் யாத்திரை செய்ய உள்ள நபர்கள் தினமும் 4 முதல் 5 மணி நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் .
அமர்நாத் யாத்திரை செல்பவர்கள் அதற்கான விதிமுறைகள் என்ன! டிக்கெட் புக் செய்ய வேண்டியது எப்படி! தங்குமிடம் பற்றி தெரிந்து கொள்வது, ஹெலிகாப்டர் முன்பதிவு செய்வதற்கான செய்திகள் போன்ற விஷயங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.