விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாப்பட்டி, இலந்தைகுளம், நெடுங்குளம், மகாராஜபுரம், தம்பிபட்டி, சுந்தரபாண்டியம், ஆயர்தர்மம், கோட்டையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 7,400 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது முதல் போக சம்பா சாகுபடி செய்து நெல் அறுவடை செய்யும் பணிகள் முடிவுற்று, கோடை கால நெல் சாகுபடி பணிகள் துவங்கியுள்ள நிலையில், நாற்று நாடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு நாற்று நடவு செய்வதற்காக நடவு செய்யும் இயந்திரத்தை மானிய விலையில் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
Image Source : dailythanthi.com