Logo of Tirunelveli Today

பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி பெறும் ஆடி அமாவாசை

July 27, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

நம்முடைய முன்னோர்களை நினைத்து வணங்கக்கூடிய அற்புதமான வழிமுறை ஆடி அமாவாசை. இந்த வருடத்தில் வரும் 28 -7- 2022 வியாழக்கிழமை அன்று ஆடி அமாவாசை வருகிறது.

அமாவாசை என்பது நம் முன்னோர்களை நினைத்து விரதம் இருக்கக்கூடிய நாள். நம் முன்னோர்களின் ஆசி, குல தெய்வத்தின் சக்தி -அனைத்தும் இந்த ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்தால் நமக்கு கிடைக்கும்.

எளிமையான முறையில் விரதம் இருப்பது எப்படி என்பதை காண்போம்...

முதல் தினமாக இரவு முதல் விரதம் ஆரம்பிப்பது நல்லது.

சனிக்கிழமை இரவு மூதாதையரை நினைத்து மனதார நினைத்து எளிதில் எளிய சிற்றுண்டி எடுத்துக்கொள்ளலாம்.

மறுநாள் காலை ஸ்நானம் செய்தவுடன், சூரிய பகவானை வணங்க வேண்டும் .

பசுமாட்டிற்கு அகத்திக்கீரை கொடுங்கள். கால் படாத இடத்தில் எள்ளும் தண்ணீரும் தெளித்தால் மூதாதையர்களின் ஆசி முழுமையாக நமக்குக் கிடைக்கும் .

இவை அனைத்தும் காலையில் நாம் மிக மிக முக்கியமாக செய்ய வேண்டும்.

முடிந்தவரை 12 மணிக்குள் விளக்கேற்றி வாழை இலை போட்டு படைத்து காகத்திற்கு சாதம் வைத்து விடுங்கள்.

வாழைக்காய், முருங்கைக்காய் , பூசணி கீரை வகைகள் காய்கறி வகைகள் மிக முக்கியமாக சேர்த்துக்கொள்ளுங்கள். வடை பாயாசம் படைப்பது நல்லது.

நம் முன்னோருக்கு பிடித்தமான காய்கறிகள் வைத்தும் படைக்கலாம். அன்றைய தினத்தில் ஏதாவது ஒரு உயிரினத்திற்கும் கண்டிப்பாக அன்னமிட வேண்டும்.

அன்றைய தினத்தில் காலபைரவரை வணங்குதல் மிகவும் நல்லது. கால பைரவரின் வாகனமான நாய்க்கு பிஸ்கட் வாங்கி கொடுக்கலாம் .

ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்யலாம். ஆடு மாடு போன்ற உயிரினங்களுக்கு அன்னம் கொடுக்கலாம்.

நம் முன்னோர்கள் ஆசி கிடைத்தால் நம்முடைய குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் .குலம் தழைக்கும். செல்வ சிறப்பு உண்டாகும். ஆரோக்கியமாக வாழ்வதற்கு கண்டிப்பாக முன்னோர் ஆசி தேவை .

மிக புனிதமான முன்னோர்களை நினைத்து வழிபடக்கூடிய இந்த சிறப்பான நாளில், முன்னோர்களை வேண்டி ஆடி அமாவாசையில் நிறைவோடு படைப்போம்.

Image source: oneindia.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2026 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify