தெய்வத்தின் பரிபூரணமான அருளை பெற்றவர்கள் அடியார்கள். அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து அன்னம் இடுவது என்பது கோடி புண்ணியத்திற்கு சமம் . பல்வேறு சங்கடங்கள் மனதில் குழப்பங்கள் இருந்தால் ஒரு அடியாரை வீட்டிற்கு அழைத்து வருதல், பூஜித்து அன்னதானம் செய்தல் என்பது மிகப்பெரிய ஒரு பரிகாரம் ஆகும்.
இந்த பரிகாரத்திற்கு ததியாராதனம் என்று வைணவத்தில் இதற்குப் பெயர் உண்டு. இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ராமானுஜரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவத்தை காண்போம்.
ஒரு முறை இராமானுஜர் திருமலை சென்று ஏழுமலையானை தரிசிக்க தம்முடைய சீடர்களுடன் புறப்படுகிறார். செல்லும் வழியில் சிற்றூரில் தங்க நினைக்க...பெரிய செல்வந்தர் எச்சான் என்பவர் ராமானுஜருடைய பக்தர் விருந்துக்கு அழைக்கிறார். ராமானுஜர் ஏற்றுக்கொண்டு விருந்துக்கு ஏற்பாடு செய்யும்படி முன்கூட்டியே தகவல் தெரிவிக்க சீடரை அனுப்புகிறார்.
எச்சானிடம் வந்து சீடன் தகவல் சொன்னதும் , சீடர் மிகவும் வெகு தூரத்தில் இருந்து வந்ததால் சோர்ந்து போய் இருப்பதை கவனிக்காது விருந்துக்கான மற்ற ஏற்பாடுகளை மகிழ்ச்சியோடு எச்சான் செய்கிறார் .
.
தண்ணீராவது கிடைக்குமா என பத்து நிமிடம் காத்திருந்து விட்டு வழியில் ஆற்றில் ஒருவாய் தண்ணீர் குடித்துவிட்டு ராமானுஜரிடம் வர ... நடந்ததை அனைத்தும் அறிகிறார். ராமானுஜர் களைப்பாக இருக்கும் தம்முடைய சீடனை கவனிக்காத எச்சானின் வீட்டில் விருந்துக்கு போகாது அதே ஊரில் ஏழ்மையாக இருக்கும் வரதாச்சாரியார் எனும் பாகவதர் வீட்டிற்கு சென்று விருந்தை ஏற்றுக் கொள்கிறார் ராமானுஜர்.
இதனால் தாக சாந்தி , சிரம பரிகாரத்திற்கு எதுவும் கொடுக்காத எச்சானுக்கு பாவ தோஷம் ஏற்படுகிறது. அதற்கு பிராயச்சித்தம் என்ன வழி என்று ராமானுஜரை வேண்ட.. தம்முடைய சீடனின் துணிகளை துவைத்து அவருக்கு பணிவிடை செய்வதுதான் அதற்கான பிராயச்சித்தம் என்று சொல்ல, அதன்படி செய்து தன்னுடைய பாவத்தை போக்கிக் கொள்கிறார்.
இப்பொழுது புரிந்ததா! தாக சாந்தி சிரம பரிகாரம் என்றால் என்ன! என்பதற்கான விளக்கம். வீட்டில் களைப்போடு வரும் ஒருவருக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்றாலும் நமக்கு அதற்கான பாவங்கள் வந்து சேரும். அடியவர்களை உபசரிக்க அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் வாழ்க்கையில் புண்ணியங்கள் பெற்று அனைத்து சுபிட்சம் பெற்ற எல்லா நலன்களும் காணுங்கள்.
Image source: dailydhanthi.com