திருநெல்வேலியில் உள்ள அரசு அருங்காட்சியகம் சார்பில் காகித கலைப் பயிற்சி இன்று நடத்தப்படுகிறது. காகிதங்கள் மூலம் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட உருவங்களை உருவாக்கும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியிருக்கும் மாணவ, மாணவியர்கள் தங்கள் நேரத்தை பயனுள்ளதாக செலவிட இது போன்ற பயிற்சிகள் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். மேலும் ஜூம் செயலி மூலம் நடைபெற உள்ள இந்த பயிற்சியில் வயது வித்தியாசம் இன்றி சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் பங்கு கொள்ளலாம். இன்று மாலை மணி அளவில் நடைபெற உள்ள இந்த காகித கலைப் பயிற்சியில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜூம் செயலி எண்: 8740995990, பாஸ்வேர்ட்: 333543, என்ற தளத்தில் இணையும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.