தெய்வத்திற்கும் நமக்கும் உள்ள தொடர்பை ஆழமாக உணர செய்வது ஆன்மீகம். நாகரீகம் வளர்ந்து விட்டது. பண்பாடு குறைந்துவிட்டது. நம் முன்னோர் சொன்ன சொல் மறந்துவிட்டது.
எங்கே செல்கின்றது உலகம்! நம் வாழ்க்கையின் தரம் எப்படி இருக்கின்றது என உணர்கின்ற நேரத்தை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு நம்முடைய விரத முறை வழிபாடுகள் மிக அவசியம்.
ஆம்! மாதம் தோறும் வணங்கி வழிபடக்கூடிய விசேஷமான விரத தினங்கள் சங்கடகர சதுர்த்தி, கிருத்திகை, அமாவாசை, பிரதோஷம், என இன்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழிந்து கொண்டுதான் இருக்கின்றது.
தீபாரதனை சிறப்பாக நடக்கின்றது. விளக்குகளின் ஒளி தீபம் பக்தியின் ஒளிப்பிழம்பாக மிளிர்கின்றது. கலியுகத்தில் ஆயிரம் தவறுகள் நடந்தாலும் மனிதநேயம் ஆன்மீகத்தில் அதிகம் ஆட்சி செய்வது இன்றும் விரத தினங்களில் காணமுடிகின்றது.
விசேஷ தினங்களை மறவாதீர்கள். அன்றைய தினம் அறிந்து வீட்டில் அல்லது கோவிலில் அரைமணிநேரம் ஆன்மீகத்தில் மனதை ஆட்சி செய்யுங்கள் .
உங்கள் வாழ்க்கை மாறும். புத்துணர்ச்சி மனதில் பிறக்கும். நம்பிக்கை மலர் பூக்கும். நினைத்தது கைகூடும்.
ஆணவம் அழிந்து, அமைதி பிறந்து, தானம் பெருகி, வாழ்வு வளமாகி செல்வச் சிறப்போடு வாழ்ந்து நல்வழிப் பாதையில் நடந்து சென்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வாழ்ந்த பயனை நிறைவு செய்யுங்கள்.