Logo of Tirunelveli Today

சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை கோலாகல திருவிழா

July 29, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் . ஆடி அமாவாசை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஒவ்வொரு வருடமும் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பிருந்தே பக்தர்கள் வர தொடங்குவர்.

ஆடி அமாவாசை திருநாளில் நதியில் பக்தர்கள் நீராடுவர் . அன்றைய தினத்தில் காரையார் காணி குடியிருப்பு காட்சி தரும் மகாலிங்க சுவாமி சொரிமுத்து அய்யனார் சுவாமியை பூஜை அலங்காரத்துடன் தரிசனம் செய்தால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகி மகிழ்ச்சிகரமான வாழ்வு நிலைக்கும் என்பது ஐதீகம். அதனால் ஆடி மாசம் என்றால் இந்த திருக்கோவிலில் அதிக பக்தர்கள் கூட்டம் அலைமோதும் ‌

இந்த வருடமும் திருவிழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று அரசு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்து இருந்தது.

நேற்று ஆடி அமாவாசை திருவிழா மிக சிறப்பாக கோலாகலமாய் நடைபெற்றது. மகாலிங்க சுவாமி சொரிமுத்து அய்யனார் ,பட்டவராயர் தூசி மாடசாமி, சங்கிலி பூதத்தார், பட்டவராயர் போன்ற அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ,ஆராதனைகள் பூஜைகள் நடத்தப்பட்டது.

பக்தர்கள் புனித நீராடி பேச்சியம்மன் சன்னதி பட்டவராயர் சன்னதிக்கு முன்பாக மகிழ்ச்சியோடு பொங்கல் இட்டனர்‌.

கோமரத்தடிகள் சங்கிலிகளை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. தாமிரபரணி முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் காண்பதற்கு பக்தி பரவசத்தோடு காட்சி அளித்தது. மாலையில் பட்டவராயர், சங்கிலிபூதத்தார் சன்னதியின் முன்பாக பூக்குழி வைபவமும் நடைபெற்றது.

பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் பல பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தினர். அதனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் போலீசார் பறிமுதல் செய்தனர் .

மாவட்ட நிர்வாகம் சார்பில் போக்குவரத்து துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை ,உள்ளாட்சித் துறை ,வனத்துறை ,மருத்துவத்துறை உள்ளிட்ட துறையினர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

கோவில் திருவிழா ஏற்பாடுகளை டி. என் .எஸ்.எம் சங்கராத்மஜன், கோவில் நிர்வாக அதிகாரி முருகன், ஆகியோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

நெல்லை மாவட்டம் மட்டுமன்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து நிறைவோடு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify