Logo of Tirunelveli Today

ஆடி அமாவாசை திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி

July 18, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

17-7-2022 ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு பிடித்த மாதம் ஆரம்பம்

ஆடி மாதம்1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 17- 7- 2022 அன்று ஆரம்பம் ‌

தமிழ் மாதத்தில் மிகவும் சிறப்பான ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம். இந்த மாதம் முழுவதும் அம்பாளுக்குரிய அருள் பெரும் ஸ்லோகங்கள், அவளுக்கு பிடித்தமான காரியங்கள், அவளுக்குப் பிடித்தமான நைவேத்தியங்கள் அவளுக்குப் பிடித்தமான பொருட்கள் என வைத்து வழிபடுவது சிறப்பு.

அவளுக்கு பிடித்தமான முக்கியமான பொருட்கள் என்ன என்று தெரிந்து கொள்வோம்;

வேப்பிலை வாசத்தில் மனம் மகிழ்வாள். வீட்டில் வேப்பிலை மாவிலை தோரணங்கள் நாள் கிழமைகளில் கட்டுங்கள். மனம் மலர்வாள்.

கேழ்வரகு கூழ் அம்மனுக்கு மிக மிக பிடித்தமானது கேழ்வரகு கம்மங்கூழ். ஆடிமாதத்தில் படைத்தால் மனம் குளிர்வாள். முன் ஜென்ம வினைகள்,பாவங்கள் விலகும். துன்பங்கள் பனிப்போல் மறையும் . இனி வரும் அனைத்தும் சுகமாகும்.

தெய்வீகத்திற்கு முதன்மையான பொருளான தேங்காய் . அர்ச்சனைக்கு மிகவும் முக்கியமானது. ஆடி மாதத்தில் இருமுறையாவது
தேங்காய் வெற்றிலை பாக்கு பழத்தோடு சேர்த்து அர்ச்சனை இந்த ஆடி மாதத்தில் கொடுத்து அவளுடைய அருளை பெறுவோம்..

இளநீர் அபிஷேம் அம்மனுக்கு மிகவும் பிடித்தமானது. அம்மன் கோவில்களில் நாட் கிழமைகளில் வாங்கி இளநீர் கொடுங்கள் . கேட்ட வரங்களை அவள் அருள்வாள்.

நாட்கிழமைகளில் (செவ்வாய், வெள்ளி கிழமைகள்) பால் போன்று மனம் கொண்ட பச்சரிசிதனை வெல்லம் பாகுதனில் முந்திரி ,திராட்சை நெய்யிட்டு மணக்க மணக்க நெய்வேத்தியம் வையுங்கள். தித்திக்கும் செய்திகளை தினம் தருவாள்.

மேலும் பேரிச்சம் பழம், கல்கண்டு என வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மனத்தூய்மையோடு வேண்டினால் நிச்சயமாய் அனைத்து பலன்களும் அவள் தருவாள்.

ஆடி மாதம் முக்கியமாக காலை , மாலை நேரங்களில் தினமும் அம்மனுடைய பாடல்கள் வீட்டில் ஒலிக்குமாறு செய்யுங்கள். எதிர்மறை சக்திகள் மறைந்து நேர்மறை சக்திகள் அனைத்தும் கிடைத்து வாழ்வினில் வெற்றி பெறலாம்.

சிட்டுக்குருவி அங்கும் இங்கும் தான் ஓடி தன் குஞ்சுகளுக்கும் அன்போடு இறை தேடி கொண்டு வந்து ஊட்டி மகிழும். அதுபோல நம் தாய்க்கு எது பிடிக்கும் என அறிந்து தேடி கொண்டு வந்து சமர்ப்பித்தல் , மனம் மகிழ்தல், அவள் புகழ் கேட்டல், அவள் புகழ் பாடுதல் கோவில் குளங்களுக்கு செல்லல் என அம்மனுக்காக அதிக நேரம் செலவிடுங்கள். அதில் மகிழ்ச்சி கண்டு அம்பாளின் பரிபூரணமான அருளை பெற்று வளமாக வாழுங்கள்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published.

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify