செய்தி குறிப்புகள்:
- நெல்லையில் மே 26 வியாழக்கிழமை மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- மீனவர்களின் கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் விஷ்ணு அறிவிப்பு.
இடிந்த கரை ,உவரி , கூத்தங்குழி கூட்டப்புளி , பெருமணல் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஊராட்சி தலைவர்களும், மீனவ பிரதிநிதிகளும் பங்கேற்று பல்வேறு புகார்கள் தெரிவித்தனர்
மீனவ கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் வராதது, பெருமணல் உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களிலும் தூண்டில் பாலம் அமைப்பு, ரூ 63 கோடியில் உவரியிலா அமைக்கப்பட்ட தூண்டில் பாலம் சீரமைப்பு, இலவச வீட்டு மனை பட்டா நிலங்கள் அடையாளப்படுத்தல் ,பஞ்சல் கடற்கரைப் பகுதியை சுற்றுலாதலமாக அறிவித்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கூட்டத்தில் சேரன்மகாதேவி கோட்டாட்சியர் சிந்து, தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குனர் அமுல் சேவியர் , ராதாபுரம் மீன்வள உதவி இயக்குனர் மோகன் குமார் வட்டாட்சியர் ராதாபுரம் சேசுராஜ் திசையன்விளை செல்வ குமார் , மீனவப் பிரதிநிதிகள் உவரி ரைமண்ட் முன்னாள் ஊராட்சி தலைவர் அந்தோணி, திமுக மீனவ அணி மாவட்ட செயலர் எரிக்ஜூடு, கூத்தங்குடி சூசை அந்தோணி, கவுன்சிலர் ராஜா , ஊராட்சி தலைவர் வளர்மதி கூடுதாழை அருணா டென்சிங், இடிந்த கரை ஊராட்சி தலைவர் சகாயராஜ் கூட்டப்பணி வினிங் அந்தோணி சேவியர் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள மீனவர்களின் கோரிக்கை மனுக்களை ஏற்ற ஆட்சியர் பேசியதாவது…
.
மீனவ கிராமங்களில் தாங்கள் கொடுத்த கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மீன்பிடித் துறைமுகம் அமைப்பது, தூண்டில் பாலம் அமைப்பது, கடற்கரை கிராம இளைஞர்களுக்காக விளையாட்டு அகாதெமி, வேலைவாய்ப்பு பயிற்சி தொடங்குதல், பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி அனைத்தும் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் மற்றும் மீனவர்கள் மனுக்கள் அனைத்தும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் . மீனவ கிராமங்களில் கடவ சீட்டு முகாம் விரைவில் நடத்தப்படும் என்றார்.
ஆதரவு எதுவுமின்றி அரசை நம்பியுள்ள மாற்றுத்திறனாளிகள் 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.