செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் 6226 பேர் நீட் தேர்வு எழுதினர்.
- எம். பி .பி .எஸ் மற்றும் பி.டி. எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு 12 மையங்களில் நடத்தப்பட்டது.
திருநெல்வேலி நெல்லை தென்காசி மாவட்டங்களில் 12 மையங்களில் நீட் தேர்வு நடப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
எம். பி .பி .எஸ் மற்றும் பி.டி. எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான இந்த நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நெல்லையில் 11 மையங்களும் தென்காசியில் ஒரு தேர்வு மையமும் என அமைக்கப்பட்டு இருந்தது.
மொத்தம் 6780 பேர் தேர்வு எழுத இருந்த சூழ்நிலையில் , அவர்களில் 6626 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். 554 பேர் தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுதவில்லை
மாணவ மாணவிகள் 11. 40 மணிக்கு நண்பகலில் ஆரம்பித்து 1:30 மணிவரை தேர்வு அறைக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு வந்த யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை .அதன் பின்னர் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5. 20 மணி வரை தேர்வு நடைபெற்றது.
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்வு அறைக்குள் மாணவ மாணவிகள் செல்வதற்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது.
மேலும் தேர்வு மையத்துக்குள் பாதுகாப்புக்கு முன்னிலை கொடுத்து முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு , கிருமி நாசினிகள் மூலம் கைகளை கழுவிய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மாணவ மாணவிகள் சங்கிலி, கம்மல் , மூக்குத்தி, பெல்ட் கைக்கடிகாரம் உள்ளிட்டவை அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் வீட்டில் இருந்து வரும் பொழுது, அதன்படி பல மாணவ மாணவியர் வந்திருந்தனர்.
ஒரு சிலர் தேர்வு மையத்துக்கு வந்த பிறகு கழற்றி உறவினர்களிடம் கொடுத்தனர் மேலும் தலையில் கிளிப் அணியவும் மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டது
தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு தேர்வு அறைக்குள் மாணவ மாணவிகள் நுழைந்தனர். மேலும் தேர்வு அறைக்குள் ப்ளூடூத், கால்குலேட்டர்கள், ஹியர் போன், மைக்ரோபோன் ,செல்போன்கள், போன்ற எந்த தகவல் தொடர்பு சாதனங்களும் கொண்டு செல்லாமல் இருப்பதற்கு சோதனை நடத்தப்பட்டது
.
பயோமெட்ரிக் முறையில் மாணவர்களின் வருகைக்காக பதிவு செய்யப்பட்டது. மேலும் உரிய அடையாள அட்டையும் சரிபார்த்த பின்னர் மாணவ மாணவியர் நீட் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
Image source: dailythanthi.com