செய்தி சுருக்கம்
- நெல்லை தாமிரபரணி ஆற்றை அசுத்தம் செய்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- குளிநீர் தரத்தை குடிநீராக மாற்றும் திட்டம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என்று கலெக்டர் அறிவிப்பு.
மக்கள் அலைவெள்ளம் போல் திரண்டு வந்து பொதிகை மலை உச்சியில் இருந்து கொட்டுகின்ற ஆற்றின் அழகை கண்டு ரசித்து குளித்து மகிழும் பெருமைக்குரிய ஆறாய் தாமிரபரணி புகழ் பெற்று விளங்குகிறது.
பல கோவில்களின் தலத்தீர்த்தம் என நெல்லையில் சிறப்பையும் தாமிரபரணி கொண்டுள்ளது.
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தாமிரபரணி நதியில் வாகனங்களை கழுவுதல், துணிகளைத் துவைத்தல் அசுத்தம் செய்தல் போன்ற செயல்பாடுகள் நடக்கின்றன. இனிமேல் அப்படி செய்தால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ ஆலங்குளம் காட்டு ராமர் கோவில் பகுதியில் இருந்து ஜடாயு தீர்த்தம் நாரணம்மாள்புரம் வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் நதிக்கரையில் அடர்ந்துள்ள முட் புதர்களை தூய்மை செய்தல் படித்துறைகளை புனரமைத்தல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நதியில் குளிக்கும் போது ரசாயனம் சோப்பு மக்காத பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அப் பணிகளை பார்வையிட்டார் ஆட்சியர் விஷ்ணு . பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது….
தாமிரபரணி ஆற்றில் 58 இடங்களில் தூய்மைப்பணி நல்ல நீர் வளத்திட்டத்திற்கு நன்கொடையாளர்கள்
தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
தாமிரபரணி நதியின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடிநீர் பெற்று வரும் நிலையில்,
நிகழ்ச்சியின் போது பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் செல்வன் திருநெல்வேலி வட்டாட்சியர் சண்முகசுந்தரம் நல்லபெருமாள் வித்யாஷங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தாமிரபரணி ஆற்றை புனிதநீராக கருதி பயன்படுத்தி அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் திருநெல்வேலி டுடே சார்பாக மக்களைக் கேட்டுக் கொள்கின்றது.