செய்திக்குறிப்புகள்:
- நெல்லை தேசிய திறனாய்வு தேர்வில் செட்டிகுளம் அரசு பள்ளி மாணவர்கள் 34 பேர் வெற்றி பெற்றனர்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வீதம் 4வருடங்களுக்கு 48 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகை.
மத்திய அரசு ஆண்டுதோறும் திருநெல்வேலி வடக்கன் குளத்தில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தி வருகிறது . மாதம் 1000 ரூபாய் வீதம் நான்கு வருடங்களுக்கு 48 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையாக அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த ஆண்டும் பல்வேறு பள்ளி மாணவர்கள் , நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் பங்கு பெற்றனர். இந்த பங்கேற்பில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 34 மாணவ மாணவிகள் வெற்றி பெற்று மாவட்டத்தில் முதல் இடமும், மாநிலத்தில் 2 ஆம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து சாதனை படைக்க காரணமாக இருந்த ஆசிரியை சாந்தினி பொன் குமாரி, தலைமை மற்றும் பயிற்சி ஆசிரியர் ஜேசு ஆகியோரை, பள்ளி மாணவர்களின் பெற்றோர் ,ஆசிரியர்கள் , கழக ஆசிரியர் ஏசுதாசன் இணை செயலர் ரசூல் பொருளாளர் லிங்கதுரை உட்பட நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பெற்றோர்களும் பாராட்டி கௌரவித்தனர்.
ஒரு மாணவன் நல்ல திறமையோடு வருவதற்கு பெற்றோர் , ஆசிரியர் சக தோழர்கள் ஊக்குவிப்பு,அறிவாற்றல் அனைத்தும் சிறப்பு அம்சமாக இருக்க வேண்டும்.
எண்ணெய் , திரி, காற்றின் அனுகூலம் இவை அனைத்தும் இருந்தால் மட்டுமே ஒரு தீபத்தின் ஒளி சுற்றிலும் சுடர்விட்டு பிரகாசமாய் எரியும். அதுபோல் தான் மாணவ(வி)ர்கள் எனும் அகல் விளக்கில் ஊற்றும் எண்ணையாக பெற்றோர்கள், திரி யாக நல்ல ஆசிரியர் (குரு) இருந்தால் மட்டுமே விளக்கு பிரகாசமாக ஒளி வீசுதல் போன்று , அந்த குழந்தைகளின் அறிவாற்றல் , சாதனை உலகுக்கு தெரியவரும். அதற்கேற்ப அரசும் மாணவ சமுதாயத்திற்காக ஊக்கம் கொடுத்து சலுகைகளை வணங்கி வருவது பாராட்டு கூறியது.
Image source: dailythanthi.com