நெல்லை மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் சந்தனாதி தைலம் தயார் செய்யும் பணி தொடங்கியது. சந்தனாதி தைலம் என்றால் என்ன என்பது பற்றி அனைவரும் அறிதல் மிக அவசியம்.
சந்தனாதி தைலம் என்பது உடலுக்கு நலம் தரும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பண்டைய தமிழ் நாட்டு சித்தர்களின் அருளால் பேரொளி தரக்கூடிய உடலில் உள்ள தோல்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தும் குளியல் தைலமாகும். அப்படிப்பட்ட அற்புதம் வாய்ந்த சந்தனாதி தைலம் சுவாமி அபிஷேகத்திற்காக நெல்லையப்பர் கோவிலில் செய்ய தொடங்கப்பட்டது.
நெல்லை நகர்ப்புற பகுதியில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 7- 7- 2021 அன்று ஆய்வு செய்தார். அப்பொழுது நெல்லையப்பர் கோவிலில் சந்தனாதி தைலம் தயார் செய்து சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் என அன்று அறிவித்தார்.
அதன்படி தற்போது சுமார் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட செம்பு பாத்திரத்தில் , சுமார் 44 சக்திவாய்ந்த மூலிகைகள் மற்றும் இதர பொருட்களை கொண்டு சந்தனாதி தைலம் 8 மாத காலங்களில் தயார் செய்ய உத்தேசிக்கபட்டது.
நேற்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் பூஜைகள் செய்யப்பட்டு சந்தனாதித் தைலம் தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா செயல் அலுவலர் ஐயர் சிவமணி கண்காணிப்பாளர் சுப்புலக்ஷ்மியின் முருகேசன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த தெய்வீக சக்தி வாய்ந்த அபூர்வ மூலிகைகள் அடங்கிய சந்தனாதி தைலம் தெய்வத்திற்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்டு அதன் பின் பக்தர்களுக்கும் பிரசாதமாக அளிக்கப்படும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு.