- நெல்லை புத்தக திருவிழாவில் குவியும் மாணவ-மாணவிகள்.
- இதுவரை 3.2 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பாக ஐந்தாவது ஆண்டாக பொருநை நெல்லை புத்தக திருவிழா கடந்த 17/03/2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனை காண தினமும் பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதில் குறிப்பாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மாணவ- மாணவிகள் ஒரு நாள் சுற்றுலாவாக வந்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த புத்தக்கண்காட்சியை இதுவரை மொத்தம் 3.2லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Image source: maalaimalar.com