தெய்வீகவழியில் செலுத்துவதற்கான குறிப்புகள்
பிரதோஷம் அன்று 'ஓம் நமச்சிவாயா' எனும் திருநாமத்தை 108 முறை சொல்வது சிறப்பு .
திருநாமத்தை சொல்லும் போது முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி அமர்ந்து வடக்கு நோக்கி அமர்ந்து சிவபெருமானை மனதில் நிறுத்தி சொல்வது சிறப்பு.
இதனால் ஏற்படும் தெய்வீக பலன் நம் மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும் .ஒற்றுமை பலப்படும் . மனச்சுமைகள் குறையும். வாழ்வினில் என்று தம்பதியர் ஒற்றுமையோடு வாழ்வதற்கு பிரதோஷ வழிபாடு நிச்சயம் பலனளிக்கும்.
சிவ பார்வதி சொரூபம் சிந்தனையில் தெவிட்டாத பேரின்பம் -சிவசக்தி நடனம் அக கண்ணால் நாம் காண மனம் முழுதும் சர்வேஸ்வரன் இடத்தில் சங்கமம்- சந்தன வாசம் சகலமும் மறக்கவைக்கும் மனோபாவம்- நெய் உருகி ஒளி கொடுக்கும் சுடரொளியில் மூச்சை அடக்கி சிவனிடத்தில் சித்தம் புகுந்து ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய எனும் அவன் நாமம் பாடி சிவன் அருளைப் பெறுவோம்.