வைகாசி மாதம் தேய்பிறை ஏகாதசி எம்பெருமானுக்கு ஏற்ற உகந்த நாள். நம் மனம் யாவும் குளிர்ந்த நாள் அனைத்து வேண்டும் வரங்கள் யாவும் நமக்கு கிடைத்து , வாழ்க்கையில் உற்சாகத்தோடு நடை போடும் நாள் என்றும் சொல்லலாம்.
நாளை பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு இறைவன் அருள் நாம் பெறலாம் . விளக்கேற்றி வழிபட்டு செல்வ சுபிட்சம் பெற்று வாழ்வில் அனைத்து வளமும் பெறுவோம்.
வைகாசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி என்பது பெருமாள் மோகினி அவதாரம் எடுத்த நாள்.
அதே வைகாசியில் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசி பாவம் விலகி புண்ணியங்கள் பெறக்கூடிய அருள்தரும் ஏகாதசி.
வைகாசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை ஏகாதசி அன்று நாம் கடைப்பிடிக்க கூடிய விரத முறை
நம் உடலும் மனமும் தூய்மையாகி நற்வழி பாதையில் நம்மை கொண்டு சென்று வாழ்வின் முடிவில் நமக்கு மோட்சத்தை அருளக்கூடிய மிக அற்புதமான ஒரு விரதம் வைகாசி தேய்பிறை ஏகாதசி விரதம்.
வைகுண்டத்தில் பள்ளி கொண்ட பெருமாள், சூரியன் வானத்தில் ஒளி கொடுப்பதைப் போன்று ஏகாதசி அன்று நம்முடைய அகக்கண்களை திறப்பதற்கு ஒளியை கொடுக்கின்றான்.
அன்றைய சிறப்பான தினத்திலே பெருமாளின் தரிசனத்தில் ஒளியை நீர் பெருக.
ஒலிபெற்ற நம்முடைய அகத்திலே நிறைந்து இருக்கும் நல்ல எண்ணங்களின் பிரதிபலிப்பின் நிறைவு காண்க .
நிறைவு பெற்ற நீங்கள் "மற்றவர்களுக்கு ஒளி கொடுக்க நான் தயங்கேன்" என்பதில் உறுதிகொள்க.
ஏகாதசி அன்று அதிகமாய் பேசாது பெருமாளின் நாமத்தை உச்சரிப்பது சிறப்பு.
துளசி கொண்ட குளிர்ந்த நீர் கொண்ட தீர்த்தத்தை மட்டும் நாள் முழுதும் எடுத்துக்கொண்டு எம்பெருமானை வழிபடுவது சிறப்பு.
ஏகாதசியின் முதல் நாளன்று ஒருபொழுது உண்டு .. மறுநாள் உப்பு சேர்க்காது - கேசரி இனிப்பு கொண்டு பெருமாளுக்கு படைத்து சாப்பிடலாம்.
அவல் தேங்காய் வெல்லம் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். பால் பழம் எடுத்துக் கொள்ளுங்கள்.
நாளைய தேய்பிறை ஏகாதசி தினத்தில் அகக்கண்ணால் நாம் தரிசிக்கும் காட்சிகள்…
பெருமாள் தாயாரோடு பார்க்கக் கூடிய அற்புத காட்சி.
பெருமாள் மோகினி அவதாரம் கொண்டு எழுந்தருளும் அழகிய காட்சி.
ஊஞ்சலிலே பள்ளிகொண்ட பெருமாள் ஆக காண்பதற்கு கண் கோடி அழகு தரும் காட்சி. என பெருமாளின் தரிசனம் அக கண்ணால் காண நம்முடைய தீவினைகள் அகன்று புண்ணியங்கள் பல கோடி தரும் .
சிறப்புமிக்க இந்த வைகாசிமாதத்தில் வரக்கூடிய தேய்பிறை ஏகாதசி அன்று விரதம் மேற்கொண்டு பெருமாளின் அருளை பெற்று பல கோடி புண்ணியங்கள் பெற்று வாழ்க்கையில் இனிது பெற்று மனிதப் பிறவியின் பிறந்த பயனை பூர்த்தி செய்வோம்.
சரணம் சரணம் சரணம்.