திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கு 491 வாக்குச்சாவடிகளிலும், அம்பை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு 42 வாக்குச்சாவடிகளிலும், களக்காடு நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு 30 வாக்குச்சாவடிகளிலும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு 51 வாக்குச்சாவடிகளிலும், 17 பேரூராட்சிகளில் உள்ள 273 வார்டுகளுக்கு 319 வாக்குச்சாவடிகளிலும் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி,அம்பை ஏ.வி.ஆர்.எம்.வி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாங்குநேரி புனித பிரான்சிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சேரன்மாதேவி பெரியார் மேல்நிலைப்பள்ளி, வள்ளியூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் மூன்று அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேர பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Image Source: dailythanthi.com