இந்திய அரசு ஆண்டு தோறும் விளையாட்டு துறையில் நமது நாட்டிற்கு நற்பெயரையும், புகழையும் பெற்று தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுனர்களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்த விருதுகளில் ராஜீவ்காந்திகேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது, ராஷ்டிரிய கேல் புரோட்ஸஹான் புரஸ்கார் விருது ஆகியவை அடங்கும்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது 2021 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விருதுகள் பெற தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.in.gov.in மூலம் ஆன்லைன் மோடில், வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்த தகவல்களை அறிந்து கொள்ள திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு அரங்கத்தை 0462-2572632 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.