செய்திக் குறிப்புகள்
- பாளையங்கோட்டையில் ஜூன் 21 ஆம் தேதி மெகா யோகா தின விழா நடைபெறுகிறது.
- சுமார் 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது
வேகவைத்த பொருட்கள் குறைத்து, இயற்கை உணவுகள் நிறைய எடுத்து, தினமும் யோகா பயிற்சி தவறாமல் செய்து உடல் நலத்தை பேணி காக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளும் விதமாக …
பாளையங்கோட்டையில் சர்வதேச யோகா தினத்தை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
யோகாசன சங்க மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். துணைத்தலைவர் சிவசங்கர் விவேகா அறக்கட்டளை தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்பொழுது நிர்வாகிகள் தம்முடைய செய்திக்குறிப்பில்…
யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவிகள் 95598 19009 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து செய்யலாம்.பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களும், அணிகளுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
இம்மாதம் 21 ஆம் தேதி காலை 6 முதல் 7 மணி வரை சுமார் 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி , நிச்சயம் மக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
மத்திய அரசின் இளைஞர் நலன் , விளையாட்டுத் துறை அமைச்சகம் , நேரு இளையோர் மையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருநெல்வேலி மாவட்ட யோகாசன சங்கம் ஆகியவற்றின் சார்பில் பாளையங்கோட்டை மைதானத்தில் இந் நிகழ்ச்சி நடைபெறுவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
வரக்கூடிய மெகா யோகா தினத்தை முன்னிட்டு , உடலுக்கு ஆரோக்கியம் தருவது யோகா. மனதுக்கு ஆரோக்கியம் தருவது யோகா என ஒருசேர நமக்கு பயனளிக்கும் யோகா பயிற்சியை , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினந்தோறும் 20 நிமிடங்கள் செய்து பயனடைய வேண்டும்…என திருநெல்வேலி டுடே இன்றைய சிறப்பு செய்தியாக தெரிவிக்கின்றது.
Image source: Hindutamil.in