கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகம் மற்றும் கேரளா இடையே இயக்கப்பட்ட அரசு பேருந்துகளின் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் இருபது மாதங்களுக்கு பின்னர் தென்காசியில் இருந்து கேரளா மாநிலத்திற்கு நேற்று முதல் பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளன. இதனை அடுத்து கேரளா அரசு போக்குவரத்துத்துறை சார்பாகவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பாகவும் இரு மாநிலங்களுக்கும் இடையில் பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.