செய்தி சுருக்கம்
- பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ 15 கோடியில் வ உ. சி மைதானம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
- விளையாட்டு மேம்பாட்டு துணை ஆணையர் அபூர்வா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் புதிய வ.உ.சி மைதானம் ரூ15 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மைதானத்தை நவீனப்படுத்தியதை தொடர்ந்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆணையர் அபூர்வா நேரில் சென்று ஆய்வு செய்தார் .
தமிழக அரசு முதன்மை செயலரும் , இளைஞர் நலன் , விளையாட்டு மேம்பாட்டு துறை ஆணையருமான அபூர்வா நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அலுவலர் அபூர்வா நேற்று நெல்லை சென்று பல்வேறு பணிகளை பார்வையிட்டார். அப்பொழுது பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ 15 கோடியில் வ உ சி மைதானம் நவீனப்படுத்தப்பட்டதையும் நேரில் சென்று அபூர்வா பார்வையிட்டார்.
பின்னர் அங்கே அருகில் உள்ள உடற்பயிற்சி கூடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .மேலும் அண்ணா விளையாட்டு அரங்கம் சென்று பார்வையிட்டார்
விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார் . மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு, ஆய்வாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.