- களக்காடு புலிகள் காப்பகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
- சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சள் பை வழங்கிய வனத்துறையினர்.
பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் மாற்ற அரசு பல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மீண்டும் மஞ்சள் பை இயக்க திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் துவக்க விழாவிலேயே, மஞ்சள் பையை அவமானமாக யாரும் கருத வேண்டாம். 'சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளப் பை தான் இந்த மஞ்சள் பை' என முதலமைச்சர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து உலக சுற்றுச்சூழல் தினம் திருநெல்வேலி களக்காடு புலிகள் காப்பகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது.
களக்காடு தலையணை சாலை, சோதனை சாவடி, சிறுவர் பூங்கா ஆற்றுப்பகுதியில் மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்றது. .
பின்னர் சிறுவர் பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டு , பின்னர் மஞ்சள் பையை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வனத்துறையினர் தலையணைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக மஞ்சள் பைகளை வழங்கினர்.
மாணவ மாணவியர் வனத்துறை ஊழியர்கள் தன்னார்வலர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் மக்களுக்கு சுற்றுச்சூழல் தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மாசற்ற மனம் இறைவன் ஏற்பான் அதுபோல் மாசற்ற பொருள் பயன்படுத்த இயற்கை அதை ஏற்கும். இறைவனும் இயற்கையும் என்றும் ஆசி வழங்க நமக்கு கிடைத்த வாழ்க்கை என்றும் வளம் பெறட்டும் என்று அனைவரும் இசைந்து ஒத்துழைப்போம். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்போம்.
Image source: dailythanthi.com